பிளட்டினம் விருது வழங்கலின் 20ஆவது நாள் நிகழ்வு

பிளட்டினம் விருது வழங்கல்: பாடசாலைமட்ட வீராங்கனைக்கான தங்கப்பதக்கம் நெத்மா மெடானி வசமானது

by Staff Writer 04-02-2019 | 8:50 PM
Colombo (News 1st) ஸ்போட்ஸ் பெஸ்ட் - அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் 20ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் கேகாலையில் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது. 71 ஆவது தேசிய தினத்தை சிறப்பிக்கும் முகமாக இன்றைய ஊக்குவிப்பு செயற்றிட்டம் கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டது. கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா மற்றும் அலியான்ஸ் நிறுவன அதிகாரிகளும் இன்றைய நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். கலை நிகழ்வுகள் அலங்கரித்த இன்றைய நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்கு பேஸ்போல், றக்பி, கால்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் கராத்தே வீராங்கனையான நெத்மா மெடானி கேகாலை மாவட்டத்தின் அதிசிறந்த பாடசாலை மட்ட வீராங்கனைக்கான தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இதன்பின்னர் நம்பிக்கையின் சுடர் வாகனத் தொடரணி கேகாலையிலிருந்து இரத்தினபுரிக்கான பயணத்தை ஆரம்பித்தது. இதன்போது, அவிஸ்ஸாவெல்ல, எஹலியகொட உள்ளிட்ட நகரங்களில் நம்பிக்கையின் சுடர் வாகனத்தொடரணிக்கு உற்சாகமான வரவேற்பு கிட்டியது.