by Staff Writer 04-02-2019 | 3:24 PM
Colombo (News 1st) மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக, ஊழலுக்கு எதிரான வேட்பாளர் நயீப் புகெலே (Nayib Bukele) உரிமைகோரியுள்ளார்.
பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முன்னாள் எல் சல்வடோர் மேயரான நயீப் புகெலே 53 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவருக்கு மிகவும் போட்டியாக விளங்கிய கன்சர்வேட்டிவ் வேட்பாளரான கார்லொஸ் கொலேஜா (Carlos Calleja) 32 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எல் சல்வடோரில் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடாத்தப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், 37 வயதான புகெலே (Bukele) நாட்டில் இடம்பெற்று வரும் ஊழலைக் கட்டுப்படுத்துவதாகவும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராகப் போராடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், முதலாவது சுற்றில் தாம் வெற்றிபெற்று, வரலாறு படைத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.