தேசிய அரசாங்க யோசனை திட்டத்திற்கு எதிராக நடவடிக்கை

தேசிய அரசாங்க யோசனைத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை - டலஸ் அழகப்பெரும

by Staff Writer 03-02-2019 | 1:36 PM
Colombo (News 1st) தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்துள்ளதாகக் கூறப்படும் பிரேரணைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது, அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரிடம் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். அரசியலமைப்புக்கு முரணாண இந்த யோசனையை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நாட்டின் அரசியலமைப்பில், 46 (5) ஆம் சரத்தை மீறுவதாகத் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 30க்கும் அதிக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.