அரசாங்கத்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை

அரசாங்கத்தால் எமது பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கவில்லை

by Staff Writer 03-02-2019 | 1:45 PM
Colombo (News 1st) அரசாங்கத்தினால் தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வொன்று முன்வைக்கப்படவில்லை என சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஒன்றியத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். சுங்கப் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட பி.எஸ்.எம். சார்ள்ஸை நிதி அமைச்சின் வருமான கண்காணிப்பு பிரிவிற்கு மாற்றி, கடற்படையின் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் ஷமல் பெர்ணான்டோவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் அண்மையில் சமர்பித்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்படி வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை சுங்க அதிகாரிகள் கடந்த 29 ஆம் திகதி முதல் ஆரம்பித்திருந்தனர். இந்தப் பணிப்பகிஷ்கரிப்பினால், கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்துவது உள்ளிட்ட பல செயற்பாடுகள் தாமதமடைந்துள்ளன. இதனால் அத்தியவசியப் பொருட்கள் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் நடவடிக்கைகளும் தாமதமடைந்துள்ளன.