by Staff Writer 02-02-2019 | 9:03 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் செயலாளராக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், செயலாளராக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றியத்தின் பொருளாளராக ஜி.ஹரிகரன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உபதலைவராக பெ. பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் உப செயலாளராக எஸ்.சத்தியசுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஒன்றியத்திற்கான மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.