படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி அவசியமில்லை

படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி அவசியமில்லை

படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி அவசியமில்லை

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2019 | 4:52 pm

Colombo (News 1st) படைப்புழுக்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விவசாய காணிகளுக்கான காப்புறுதி அவசியமில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இழப்பீடு வழங்குவதற்கு படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மதிப்பீடு செய்யும் குழுவின் அனுமதி மாத்திரம் போதுமானது என அ​மைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நிலங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அந்நடவடிக்கைகள் நிறைவு பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர் இழப்பீடுகள் வெகு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்