தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பார்த்திபன் விலகல்

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பார்த்திபன் விலகல்

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பார்த்திபன் விலகல்

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2019 | 6:40 pm

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட நடிகர் பார்த்திபன் பதவியில் இருந்து விலகுவதாக இராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், பார்த்திபன் தனது துணைத்தலைவர் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பதவியை இராஜினாமா செய்தது பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் பார்த்திபன் எதுவும் சொல்லவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்