அமெரிக்காவிலிருந்து விசேட வைரஸ் தருவிப்பு 

படைப்புழுவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து விசேட வைரஸ் தருவிப்பு 

by Staff Writer 01-02-2019 | 4:01 PM
Colombo (News 1st) படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவிலிருந்து விசேட வைரஸ் தருவிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸைப் பயன்படுத்தும் பரீட்சார்த்த முயற்சி முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அது வெற்றியளிக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தவுள்ளதாக தாவரவியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதான விஞ்ஞானி எஸ்.எஸ்.வெலிகமகே தெரிவித்தார்.