கடுங்குளிரால் அமெரிக்காவில் 21 பேர் உயிரிழப்பு

கடுங்குளிருடனான காலநிலையால் அமெரிக்காவில் 21 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 01-02-2019 | 5:21 PM
அமெரிக்காவில் நிலவும் கடுங்குளிருடனான காலநிலையால் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் குளிர் தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. கடந்த தசாப்தங்களில் நிலவாத அளவில், உறைபனியுடனான காலநிலை தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, அண்டார்டிக்காவை விட சிகாகோவில் அதிக குளிர் காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மைனஸ் 33 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் கடுங்குளிர் காற்று வீசும்போது, மைனஸ் 46 பாகை செல்சியஸில் வெப்பநிலை நிலவுவது போன்று காணப்படுமெனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.