புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கான வர்த்தமானி வௌியீடு தற்காலிகமாக இடைநிறுத்தம்: மனோ கணேசன் தெரிவிப்பு

புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கான வர்த்தமானி வௌியீடு தற்காலிகமாக இடைநிறுத்தம்: மனோ கணேசன் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2019 | 8:44 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று மாலை நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க , தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவீந்திர சமரவீர ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

கலந்துரையாடலின் போது கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வது தொடர்பில் தொழில் அமைச்சுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்