சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு உத்தரவு

சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு உத்தரவு

சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2019 | 4:54 pm

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இராணுவத் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் இராணுவத் தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பணியில் இருக்கும் இராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இராணுவ இரகசியங்கள் மற்றும் தகவல்கள் கசிவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்