பிரேசிலின் பிரபல கால்பந்து பயிற்சிக்கூடத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

பிரேசிலின் பிரபல கால்பந்து பயிற்சிக்கூடத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

பிரேசிலின் பிரபல கால்பந்து பயிற்சிக்கூடத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2019 | 6:02 pm

பிரேசிலின் ஃப்ளமிங்கோ கால்பந்து பயிற்சிக்கூடத்தில் நேற்று (08) ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

பயிற்சிக்கூடத்தில் நேற்று காலை திடீரென தீ பரவியதாகவும் ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த 6 வீரர்களும் அங்கு பணிபுரிந்த 4 பேரும் பலியானதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த விபத்திற்கு பிரேசிலின் பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ உட்பட பலரும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.