English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
10 Feb, 2019 | 8:34 am
Colombo (News 1st) சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் மில்லியனுக்கும் மேற்பட்ட உய்கர் (Uighur) இன மக்கள், தடுத்துவைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த தடுப்பு முகாம்களை மூடுமாறு சீன அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக துருக்கிய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் சிறப்பு தொழிற்பயிற்சிப் பாடசாலைகளுக்கு மக்கள் தாமாகவே விரும்பி செல்வதாகவும் அவை வசதிகளுடன் கூடிய புனர்வாழ்வளிப்பு நிலையங்கள் எனவும் தெரிவித்து, சீனா குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்நிலையில், மில்லியன் கணக்கான உய்கர் இன மக்களை சிறைக்கைதிகளாக தடுத்துவைத்து சித்திரவதைக்குள்ளாக்கி அவர்களுக்கு அரசியல் ரீதியில் மூளைச் சலவை செய்யும் சீனாவின் செயற்பாடு, அழுத்தம் மிகுந்தது என துருக்கிய வௌிவிவகார அமைச்சசின் பேச்சாளர் ஹமி அக்சோய் (Hami Aksoy) தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை, மனிதாபிமானத்திற்கு எதிரானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ கட்டேரஸிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக, ஹமி அக்சோய் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் 45 வீதமானோர் உய்கர் இன மக்கள் என்பதுடன், இனவழிப்பு முயற்சியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
16 Jan, 2019 | 04:28 PM
05 Jan, 2019 | 03:06 PM
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS