சியரா லியோனில் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்: அவசரகால நிலை பிரகடனம்

சியரா லியோனில் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்: அவசரகால நிலை பிரகடனம்

சியரா லியோனில் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்: அவசரகால நிலை பிரகடனம்

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2019 | 5:00 pm

சியரா லியோனில் தொடரும் வன்முறைகளால் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சியரா லியோனில் கடந்த வருடத்தில் மாத்திரம் 8,500-இற்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸாரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நிலவும் பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ ( Julius Maada Bio) அறிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களின் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தற்போதைய சட்டத்தின் பிரகாரம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பலருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.