பெரிய வெங்காய இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 31-01-2019 | 9:59 AM
Colombo (News 1st) பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் பி.ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்,. இதேவேளை, பாசிப்பயறு, கௌபி போன்ற ஏனைய தானியங்களை இறக்குமதி செய்வதற்கும் எதிர்காலத்தில் வரையறை விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.