பல்கலைக்கழக அனுமதி: கால அவகாசம் நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

by Staff Writer 31-01-2019 | 5:02 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக அனுமதிக்கு விணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்திற்கான இறுதி நாள் நாளை (01) வரை வழங்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.