தாய்லாந்தில் 400 பாடசாலைகள் மூடப்பட்டன

தாய்லாந்தில் வளி மாசடைவு: 400க்கும் அதிக பாடசாலைகள் மூடப்பட்டன

by Chandrasekaram Chandravadani 31-01-2019 | 11:41 AM
Colombo (News 1st) தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் வளி மாசடைந்துள்ளமையால், அதிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 400க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், இந்த வளி மாசடைவானது எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடரும் என அதிகாரிகள் கூறியதையடுத்து, சுமார் 437 பாடசாலைகளை மூடுமாறு அந்நாட்டு பிரதமர் பிரேயுத் சான் ஒச்சா (Prayuth Chan-ocha) உத்தரவிட்டுள்ளார். மேலும், மக்கள் தமது வௌிப்புற செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு, அந்நாட்டு பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.