அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர்

அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர்: 2000 விமானங்கள் இரத்து

by Bella Dalima 31-01-2019 | 4:22 PM
அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பனிப்பொழிவால் 2000 விமானங்களின் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குளிர்காலம் நிலவுவதால் கடுமையான குளிர் வீசுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக நீடிக்கிறது. சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி அளவிலும் மிச்சிகனில் மைனஸ் 37 டிகிரி அளவிலும் குளிர் நிலவுகிறது. இது, மைனஸ் 40 டிகிரியைத் தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. துருவப் பகுதியில் இருக்கும் குளிரை விட இப்போது அமெரிக்காவில் அதிக குளிர் வீசுகிறது. பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதுடன், கடும் குளிர் காற்றும் வீசுகிறது. சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறிவிட்டது. பல இடங்களில் விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால் 2000 விமானங்களின் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் அரசு நிறுவனங்களும் பாடசாலைகளும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.