மலேசிய மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா

மலேசிய மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா

மலேசிய மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2019 | 3:48 pm

Colombo (News 1st) மலேசியாவின் 16 ஆவது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா இன்று பதவியேற்றார்.

மலேசிய மன்னராக கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6 ஆம் திகதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால் தான் இராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது குறித்து அரண்மனை கருத்துத் தெரிவிக்கவில்லை.

இஸ்லாமிய மன்னர்களின் ஆளுகையின் கீழ் உள்ள மலேசியாவில் 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர்.

அவ்வகையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, பஹாங் மாநிலத்தின் தலைவரான சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா (வயது 59), கடந்த 24 ஆம் திகதி புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16 ஆவது மன்னர் ஆவார்.

இதையடுத்து, கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் புதிய மன்னர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்