by Staff Writer 31-01-2019 | 7:48 AM
Colombo (News 1st) பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசாரணை செய்வதற்கு பொலிஸ் குழுவொன்று அந்நாட்டிற்கு செல்லவுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் பொலிஸ் குழுவை பங்களாதேஷுக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
டாக்காவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 5 சந்தேகபர்களில் பெண்ணொருவர், இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் பிரதான சந்கேநபர் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அண்மையில் இரத்மலானை பகுதியில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை போதைப்பொருள் கடத்தலுடனும் குறித்த பெண், தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கும் குறித்த பெண்ணே வாடகை செலுத்தியுள்ளமை கண்டறியப்பபட்டுள்ளது.
இந்தச்ப சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தொடர்பில் நாட்டின் சட்டத்தின் கீழ், முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.