செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 30-01-2019 | 6:30 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. முறிகள் மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தென்னாபிரிக்க ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். 02. சொத்து விபரங்களை வௌியிடாத குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 03. கிண்ணியா, கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 04. பொகவந்தலாவை – ரொக்கில் தோட்டம், வானக்காடு பகுதியில் லயன் குடியிருப்பில் பரவிய தீயால் 14 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. வெனிசூலா அரசாங்கத்திற்கு உரித்தான எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. 02. நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என விபத்து குறித்த இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியில், வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ளார். 02. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது.