வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2019 | 8:32 pm

Colombo (News 1st)  வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பஸ் தரிப்பிட வளாகத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாகக் கண்டி வீதிக்கு பேரணியாகச் சென்றனர்.

அங்கிருந்து மீண்டும் பழைய பஸ் தரிப்பிடத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்