ரவிராஜ் படுகொலை: மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 30-01-2019 | 3:29 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு வழக்கு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சசிக்கலா ரவிராஜினால் இந்த மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.