போதைப்பொருள் கடத்தற்காரர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்: ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்

போதைப்பொருள் கடத்தற்காரர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்: ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2019 | 8:21 pm

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தற்காரர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் இன்று மாத்தறையில் வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸ், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற போதையற்ற நாடு செயலமர்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் பாடசாலை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு இலச்சினை அணிவித்து, கிராம மட்டத்தில் செயற்படும் 4 போதைப்பொருள் ஒழிப்புக் குழுக்களை பாராட்டி சான்றிதழ்களும் இங்கு வழங்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்