தோட்டத்தொழிலாளர்களுக்கு 140 ரூபா ஊக்குவிப்புத்தொகை கிடைக்காவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவதாக திகாம்பரம் தெரிவிப்பு

தோட்டத்தொழிலாளர்களுக்கு 140 ரூபா ஊக்குவிப்புத்தொகை கிடைக்காவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவதாக திகாம்பரம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2019 | 8:10 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை கிடைக்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

தோட்டத்தொழிலாளர் சம்பளப் பிரச்சினை விடயத்தில் ஆறுமுகன் தொண்டமானும் வடிவேல் சுரேஷூம் காட்டிக்கொடுத்து செயற்பட்டதாகக் குறிப்பிட்ட பழனி திகாம்பரம், வெறுமனே 20 ரூபா மாத்திரமே கூடியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள பிரதமருடனான கலந்துரையாடலின் போது ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாவை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தாம் வலியுறுத்தப் போவதாகவும் பழனி திகாம்பரம் கூறினார்.

அவ்வாறு வழங்கப்படாவிடின், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதாகவும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்