கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி

கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி

கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலிய நதி

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2019 | 3:55 pm

அவுஸ்திரேலியாவில் உள்ள டார்லிங் நதியில் (Darling river) கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால், அந்நதி வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் புகழ்மிக்க டார்லிங் நதி உள்ளது. இது முர்ரே டார்லிங் நதியின் ஒரு பகுதியாகும். பல ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்நதியில் மீன்கள் உள்ளிட்ட பல நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கடுமையான வறட்சி காரணமாக ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியுள்ளன.

நதிக்கு அருகே உள்ள மெனின்டீ பகுதி மக்கள் நதியின் மேற்பகுதியில் மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.

வெப்பநிலை மாற்றம் மற்றும் ஒக்ஸிஜன் அளவு குறைந்து ஆல்கா நச்சாக மாறியதால், மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து ஆற்றில் கலக்கும் மாசு தான் மீன்கள் சாவதற்கு உண்மையான காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடுமையான வெப்பநிலை அவுஸ்திரேலியாவைத் தாக்கி 40-இற்கும் மேற்பட்ட குதிரைகள் இறந்தன. இந்நிலையில், திடீரென வெப்பநிலை குறைந்ததாலும், பருவகால மழை காலதாமதமாக பெய்ததாலும் அவுஸ்திரேலிய மக்கள் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்