குப்பைகளை அறுவைக்காட்டில் கொட்டுவதற்கான நடவடிக்கை ஆரம்பம்

குப்பைகளை அறுவைக்காட்டில் கொட்டுவதற்கான நடவடிக்கை ஆரம்பம்

குப்பைகளை அறுவைக்காட்டில் கொட்டுவதற்கான நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2019 | 7:29 am

Colombo (News 1st) புத்தளம் உள்ளூராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அறுவைக்காடு திண்மக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தளம் – அறுவைக்காடு திண்மக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கான ஆரம்பப் பணிகள் நிறைவுற்றுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் முதல்கட்டமாக 400 தொன் குப்பைகளைக் கொட்ட முடியும் எனவும் அதற்கான செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நிறைவிற்கு வரவுள்ளதாகவும் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி முதல் புத்தள மாவட்டத்தினுள் அளடங்கும் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொட்ட முடியும் எனவும் நிஹால் ரூபசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை ரயில் மூலம் அறுவைக்காட்டுக்கு கொண்டு செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டபோதிலும் தற்போது குறித்த குப்பைகளை களனி திண்மக்கழிவு சுத்திகரிப்பு மத்திய நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கு நீரகற்றப்பட்டு அறுவைக்காடு திண்மக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்