by Staff Writer 30-01-2019 | 7:54 AM
Colombo (News 1st) உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் விதைகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ், இதனை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.