T20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வௌியீடு

T20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வௌியீடு

by Bella Dalima 29-01-2019 | 3:59 PM
அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணையை ICC இன்று வெளியிட்டது. T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை ICC 2007 இல் அறிமுகப்படுத்தியது. அறிமுக உலகக்கிண்ண போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 ஓவர் உலகக்கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. 2009 இல் பாகிஸ்தானும், 2010 இல் இங்கிலாந்தும், 2012 இல் மேற்கிந்தியத் தீவுகளும் 2014 இல் இலங்கையும் 2016 இல் மேற்கிந்தியத் தீவுகளும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றின. 7 ஆவது T20 உலகக்கிண்ண போட்டி அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது. ICC தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 9 ஆவது மற்றும் 10 ஆவது இடங்களில் உள்ள இலங்கை, பங்களாதேஷ் மற்றும் 6 இதர அணிகள் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். இதில் இருந்து 4 அணிகள் தகுதி பெறும். தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறவில்லை. இரண்டு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள் வருமாறு:- A பிரிவு: பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, தகுதி பெறும் அணிகள். B பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதி பெறும் அணிகள். 20 ஓவர் உலகக்கிண்ணத்தில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.  

Full Schedule for 2020 Men's T20 World Cup

18th October: Sri Lanka vs Qualifier A3 18th October: Qualifier A2 vs Qualifier A4 19th October: Bangladesh vs Qualifier B3 19th October: Qualifier B2 vs Qualifier B4 20th October: Qualifier A3 vs Qualifier A4 20th October: Sri Lanka vs Qualifier A2 21st October: Qualifier B3 vs Qualifier B4 21st October: Bangladesh vs Qualifier B2 22nd October: Qualifier A2 vs Qualifier A3 22nd October: Sri Lanka vs Qualifier A4 23rd October: Qualifier B2 vs Qualifier B3 23rd October: Bangladesh vs Qualifier B4 24th October: Australia vs Pakistan 24th October: India vs South Africa 25th October: A1 vs B2 25th October: New Zealand vs West Indies 26th October: Afghanistan vs A2 26th October: England vs B1 27th October: New Zealand vs B2 28th October: Afghanistan vs B1 28th October: Australia vs West Indies 29th October: Pakistan vs A1 29th October: India vs A2 30th October: England vs South Africa 30th October: West Indies vs B2 31st October: Pakistan vs New Zealand 31st October: Australia vs A1 1st November: South Africa vs Afghanistan 1st November: India vs England 2nd November: A2 vs B1 2nd November: New Zealand vs A1 3rd November: Pakistan vs West Indies 3rd November: Australia vs B2 4th November: England vs Afghanistan 5th November: South Africa vs A2 5th November: India vs B1 6th November: Pakistan vs B2 6th November: Australia vs New Zealand 7th November: England vs A2 7th November: West Indies vs A1 8th November: South Africa vs B1 8th November: India vs Afghanistan 11th November: Semifinal 1 12th November: Semifinal 2 15th November: Final