வெனிசூலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

வெனிசூலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

by Staff Writer 29-01-2019 | 8:21 AM
Colombo (News 1st) வெனிசூலா அரசாங்கத்திற்கு உரித்தான எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால், வருமான மூலத்திற்கு விதிக்கப்பட்ட முதல் தடையாகும். அமெரிக்கா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள், வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரை அங்கீகரித்துள்ளன. எதிர்வரும் 8 நாட்களுக்குள் மறு தேர்தலுக்கு அழைப்பு விடுக்காதபட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் குவைடோவையே ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்வதாக குறித்த அறிவித்துள்ளன. எனினும், இதற்கு கண்டனம் வௌியிட்ட வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, ஐரோப்பிய நாடுகளுடன், வெனிசூலா இணைக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே, அந்நாட்டின் மீது புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.