திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 29-01-2019 | 6:54 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பிற்கான யோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி நியமித்த விசேட குழு, தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. 02. போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் விசேட திறமைகளை வௌிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 03. கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் இருந்தால், அது தொடர்பில் தமது அமைச்சுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 04. மத்தியவங்கி முறிகள் மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் திரிபுபடுத்தப்பட்ட மற்றுமொரு குரல் பதிவை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். 05. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவாக நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்தி 01. வெனிசூலாவில் அந்நாட்டு குடிமக்களுக்கு எதிரான உடல் மற்றும் வாய்வழியான தாக்குதல்கள் இடம்பெறுவதாக, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரமைப்பு தெரிவித்துள்ளது. விளையாட்டுச் செய்தி 01. தேசிய ரீதியில் திறமையான வீரர்களைக் கௌரவிக்கும் ஸ்போட்ஸ்பெஸ்ட் – பிளட்டினம் விருது வழங்கல் ஊக்குவிப்பு செயற்றிட்டம் அம்பாறை டி.எஸ். சேனநாயக்க கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.