விமானியின் மன அழுத்தமே விபத்திற்கு காரணம்

விமானியின் மன அழுத்தமே விபத்திற்கு காரணம்

விமானியின் மன அழுத்தமே விபத்திற்கு காரணம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Jan, 2019 | 9:21 am

Colombo (News 1st) நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என விபத்து குறித்த இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்து 71 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம், காத்மண்டுவில் தரையிறங்கியபோது தீப்பற்றியது.

இதன்போது 51 பேர் உயிரிழந்தனர்.

வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுடனான மோசமான தொடர்பே விமான விபத்துக்கு காரணம் என முன்னதாகக் கூறப்பட்டது.

ஆனால், விமானி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் விமானக் குழுவினருடன் கோபமாக பேசியதாகவும் விமானி, அறையில் புகைபிடித்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானி மிகுந்த மன அழுத்தத்துடனும் வேதனையுடனும் இருந்ததாகவும் அவருடன் விமானத்தில் பயணிக்காத பெண் ஊழியர் ஒருவர் அவரின் விமானத்தின் திறமை குறித்து கேள்வி எழுப்பியதே அதற்கு காரணம் எனவும் நேபாள விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1993ஆம் ஆண்டு, மன அழுத்த பாதிப்பால் பங்களாதேஷ விமான சேவையிலிருந்து நீக்கப்பட்ட 52 வயதான விமானி, பின் உள்ளூர் விமானங்களை செலுத்த தகுதியானவர் என மீண்டும் பணியில் இணைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் எந்தவித மன அழுத்த அறிகுறிகளையும் தெரிவிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்