மன்னாரில் 16 ஏக்கர் காணி விடுவிப்பு

மன்னாரில் 16 ஏக்கர் காணி விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2019 | 8:56 pm

Colombo (News 1st) மன்னாரில் இராணுவத்தினர் வசமிருந்த சுமார் 16 ஏக்கர் காணி இன்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஏற்கனவே விடுவிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த காணிகளுக்கு மேலதிகமாக இரண்டு ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முருங்கன், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட 9 இடங்களில் 16 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்