பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ பரவல்

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ பரவல்: 14 வீடுகள் சேதம் 

by Staff Writer 29-01-2019 | 3:27 PM
Colombo (News 1st) பொகவந்தலாவை - ரொக்கில் தோட்டம், வானக்காடு பகுதியில் லயன் குடியிருப்பில் பரவிய தீயால் 14 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று பகல் லயன் குடியிருப்பில் தீ பரவியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதனால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். வானக்காடு தோட்டத்திலுள்ள ஆலயத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லயன் குடியிருப்பில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. பொகவந்தலாவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்