பிரேசிலில் சுரங்க அணை உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் சுரங்க அணை உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் சுரங்க அணை உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2019 | 5:28 pm

பிரேசிலில் உள்ள சுரங்க அணை உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, காணாமற்போன 297 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலைச் சேர்ந்த 136 பேரைக் கொண்ட மீட்புக்குழுவினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vale எனும் பிரேசிலின் பாரியதொரு சுரங்க அகழ்வு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த அணை உடைந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இரும்புத்தாது சுரங்கத்திற்கு அருகிலுள்ள குறித்த அணை உடைந்ததில், அதன் கீழுள்ள இன்னொரு அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த அணைக்கட்டானது, சுரங்கத்தில் இருந்து வரும் நீரை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்