தன்சானியாவில் கடத்தப்பட்ட 10 சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

தன்சானியாவில் கடத்தப்பட்ட 10 சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

தன்சானியாவில் கடத்தப்பட்ட 10 சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2019 | 6:01 pm

தன்சானியாவில் கடத்தப்பட்ட 10 சிறுவர்கள், உடல் துண்டாக்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தன்சானியாவின் ஜொம்பே (Njombe) மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணாமற்போன குறித்த சிறுவர்கள் 10 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தன்சானியாவின் பிரதி சுகாதார அமைச்சர் Ndugulile தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட உடல்களில் இருந்து அந்தரங்க உறுப்புகளும் பற்களும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையிலேயே சிறுவர்களின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் மூட நம்பிக்கைகளின் பின்புலத்தில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேலும் பல சிறுவர்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தன்சானியாவின் பிரதி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்