SriLankan Airlinesஇன் மறுசீரமைப்பு குறித்த அறிக்கை

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை கையளிப்பு

by Staff Writer 28-01-2019 | 10:27 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பிற்கான யோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி நியமித்த விசேட குழு, தமது அறிக்கையை இன்று (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவை தலைவராகக் கொண்ட இந்தக் குழுவை, கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி நியமித்திருந்தார். நிறுவனத்தைக் கலைத்து மீண்டும் நிறுவுதல், முகாமைத்துவ உடன்படிக்கை, கடன் மறுசீரமைப்பு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய 3 பிரிவுகள் தொடர்பிலும் இந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடன் முகாமைத்துவம் மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என இரான் விக்ரமரத்ன இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.