படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம்

படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம்

by Staff Writer 28-01-2019 | 8:47 PM
Colombo (News 1st) படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் மக்களுடன் இணைந்து தேசிய திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு, நியூஸ்பெஸ்ட் மற்றும் விவசாய அமைச்சு என்பன நடவடிக்கை எடுத்துள்ளன. அது தொடர்பில் தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்று பேராதனை - கன்னொருவையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் மூலம் படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தௌிவுபடுத்தப்படவுள்ளனர். அதனை முன்னெடுக்கவேண்டிய விதம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சின் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இதன்போது,
கமநலசேவை மத்திய நிலையத்திற்கு இன்று மாதிரிகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மக்கள் இங்கு புழுவை விட்டுச் செல்கின்றனர். எடுத்துச் செல்லவதில்லை. இது அபாயகரமான நிலைமையாகும். இல்லாவிட்டால் அருகிலுள்ள கால்வாயில் விட்டுச் செல்கின்றனர். பின்னர் அது பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும்
என விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மொனராகலை, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தௌிவூட்டும் திட்டம் நாளை (29) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, அனுராதபுர மாவட்டத்தின் நொச்சியாகம பிரதேச செயலகத்தில் தொடவலகம பிரதேசத்தில் நெற்செய்கையில் இருந்து படைப்புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் அரைப்பகுதி படைப்புழுவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று நடைபெற்ற ஊடக சந்திப்புக்களிலும் படைப்புழுவின் தாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நாம் காண்கிறோம். தற்போது பல்வேறு விடயங்கள் இடம்பெறுகின்றன. மிக விரைவாக அது இடம்பெறுகிறது. 670 மில்லியின் ரூபாவிற்கு 12,000 மெட்ரிக் தொன் சோளம் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திரிபோஷாவிற்கு கே.எஸ்.ஜீ. என்ற நிறுவனத்திற்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது. ஏன் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நாட்டில் சோளம் கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் இல்லையா? நல்லாட்சி அரசாங்கத்தில் விலைமனு முறை இல்லையா?
என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். கேள்வி - உரிமையாளர் யார் என்று தெரியாதா? பதில்: இல்லை. ஆராய்ந்து கூறுகின்றேன். கேள்வி: யார் இதனை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். பதில்: எனது நண்பரான ராஜித்த சேனாரத்ன மற்றும் ஹரிசன் ஆகிய அமைச்சர்களே இணைந்தே இதனை செய்துள்ளனர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.