by Staff Writer 28-01-2019 | 7:13 PM
Colombo (News 1st) கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் இருந்தால், அது தொடர்பில் தமது அமைச்சுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி ஆசிரியைககளுக்கு இலகுவான மற்றும் பொருத்தமான ஆடையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் கடந்த வருடத்தில் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதற்கிணங்க, 2018 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி 2018/21 சுற்றறிக்கையினூடாக இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு தௌிவூட்டப்பட்டது.
கர்ப்பிணி ஆசிரியைகள் குறித்த ஆடையுடன் பாடசாலைக்கு வருவதற்கு சில அதிபர்கள் தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்யமுடியும் எனவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.