by Staff Writer 28-01-2019 | 7:24 PM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெள்ளம் மற்றும் படைப்புழுக்களின் தாக்கத்தினால் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வௌியிட்டுள்ளனர்.
மேலும், நெல்லுக்கான விலையில் தளம்பல் நிலை காணப்படுகின்றமையால், அவற்றை விற்பனை செய்வதில் பிரச்சினைகள் காணப்பட்டாலும், தனியார் துறையினர் நெல் கொள்வனவில் அதிகளவு ஆர்வம்காட்டி வருவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.