by Chandrasekaram Chandravadani 27-01-2019 | 12:43 PM
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவங்களில், 20க்கும் அதிகமானோர் கொல்லப்ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்ற ஜோலோ தீவிலுள்ள குறித்த தேவாலயத்தில் காலை நேர ஆராதனையின்போது, முதலாவது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர், இரண்டாவது குண்டு அங்குள்ள கார் தரிப்பிடத்தில் வெடித்துள்ளது.
இந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.