சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 27-01-2019 | 6:20 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 02. கண்டி – கொட்டப்பொல பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்தது. 03. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில், 59 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை. 04. மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள பீட்டா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 05. ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அமைச்சரவை குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு 06. கொழும்பு – காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வௌிநாட்டுச் செய்திகள் 01. பிரேஸிலில் அணை உடைந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர் வரை காணாமற்போயுள்ளனர். 02. இந்தியாவின் 70ஆவது குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. விளையாட்டுச் செய்திகள் 01. ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் – பிளட்டினம் விருது வழங்கல் விழாவின் 11ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் பொலன்னறுவையில் இடம்பெற்றது. 02. இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.