உயிரிழந்த முப்படையினரின் மனைவிமாருக்கு கொடுப்பனவு

ஊனமுற்ற மற்றும் உயிரிழந்த முப்படையினரின் மனைவிமாருக்கு ஆயுள் முழுவதும் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

by Staff Writer 26-01-2019 | 3:56 PM
Colombo (News 1st) ஊனமுற்ற மற்றும் உயிரிழந்த முப்படையினரின் மனைவி மற்றும் அவர்களின் ஆதரவில் வாழ்வோருக்கு 55 வயது வரை வழங்கப்பட்ட கொடுப்பனவை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஆயுள் முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்புகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சட்டரீதியான செயற்பாடுகளின் போது அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த முப்படையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுவதும் இந்த கொடுப்பனவை வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அங்கவீனமுற்ற படையினரால் மிக நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பிரதானமான 8 கோரிக்கைளுக்கான தீர்வை விரைவில் வழங்க ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

ஏனைய செய்திகள்