இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் இன்று

இந்தியாவின் 70 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றன

by Bella Dalima 26-01-2019 | 8:00 PM
இந்தியாவின் 70 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் டெல்லி ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் இந்தியாவின் 70 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கலந்துகொண்டிருந்தார். இந்திய இராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.