by Staff Writer 26-01-2019 | 4:20 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழுவின் உறுப்பினர் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அமைச்சர் எரான் விக்ரமரத்னவின் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தற்போது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பான கொள்கை ரீதியான பரிந்துரைகள் பலவற்றை உள்ளடக்கி, விசாரணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்.