பிளாட்டினம் விருதுகள்: பொலன்னறுவையில் 11 ஆம் நாள் செயற்றிட்டம்

பிளாட்டினம் விருதுகள்: பொலன்னறுவையில் 11 ஆம் நாள் செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2019 | 9:11 pm

Colombo (News 1st) ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் – பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் 11 ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்திட்டம் இன்று பொலன்னறுவையில் கண்கவரும் விதத்தில் இடம்பெற்றது.

மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமான Allianz நிறுவனம் இவ்வருட பிளாட்டினம் விருது வழங்கல் விழாவிற்கு அனுசரணை வழங்குகின்றது.

ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் – Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவில் பொலன்னறுவை மாவட்ட ஊக்குவிப்பு செயற்றிட்டம் பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்றது.

பொலன்னறுவை மாவட்ட கல்வி திணைக்கள அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா மற்றும் Allianz நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு கால்பந்தாட்டம் , பேஸ்போல், ரக்பி உள்ளிட்ட விளையாட்டுக்களின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டதோடு, கலைநிகழ்வுகள் நிகழ்வை அலங்கரித்தன.

பொலன்னறுவை மாவட்டத்தின் பாடசாலை மட்ட திறமை வாய்ந்தவருக்கான தங்கப்பதக்கத்தை தோபாவெவ மத்திய மகா வித்தியாலயத்தின் டிமாலி ஹபுஹின்ன சுவீகரித்தார்.

பொலன்நறுவை மத்திய மகா வித்தியாலயத்தின் இசுரு உபேக்ஷ வெள்ளிப்பதக்கத்தையும் அதே கல்லூரியின் ஜே.ஜி. உபமாலி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

நம்பிக்கை சுடர் வாகனத் தொடரணி வெலிகந்த , பாசிக்குடா ஊடாக இன்று மாலை மட்டக்களப்பை சென்றடைந்ததோடு, அங்கு ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் குழாத்தினருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்