கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோகிராமினால் வீழ்ச்சி

கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோகிராமினால் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2019 | 4:56 pm

Colombo (News 1st) கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோகிராமினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டின் மொத்த தேயிலை உற்பத்தி 307 மில்லியன் கிலோகிராமாகப் பதிவாகிய நிலையில், கடந்தாண்டின் உற்பத்தி 303 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களும் தேயிலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் பற்றிய கொள்கை மாற்றங்களும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் அடைமழை போன்றவையும் இதற்கான பிரதான காரணங்களாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்