பொலிஸாருக்கு எதிராக இணையத்தளமூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்

பொலிஸாருக்கு எதிராக இணையத்தளமூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்

பொலிஸாருக்கு எதிராக இணையத்தளமூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2019 | 3:47 pm

Colombo (News 1st) இன்று முதல் பொலிஸாருக்கு எதிராக இணையத்தளமூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பதிவு செய்யும் முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜி.எச். மனதுங்க குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.npc.gov.lk என்ற முகவரிக்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

பொதுமக்களால் வழங்கப்படும் முறைப்பாடுகளுக்கு அமைய, முறைப்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பக்கசார்பாக செயற்படுவதாகவும் விசாரணைகள் தாமதமாவதாகவும் பெருமளவான முறைப்பாடுகள் தற்போது கிடைப்பதாக ஜி.எச். மனதுங்க தெரிவித்தார்.

வருடாந்தம் இவ்வாறு சுமார் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்