பிளாட்டினம் விருது வழங்கல் விழா: திருகோணமலையின் திறமைவாய்ந்த வீராங்கனையாக நாகேந்திரம் உதயவாணி தெரிவு

பிளாட்டினம் விருது வழங்கல் விழா: திருகோணமலையின் திறமைவாய்ந்த வீராங்கனையாக நாகேந்திரம் உதயவாணி தெரிவு

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2019 | 8:40 pm

Colombo (News 1st) திறமைவாய்ந்த வீர, வீராங்கனைகளை வெளிக்கொணரும் ஸ்போர்ட்ஸ்ஃபெஸ்ட் – Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவில் இன்றைய ஊக்குவிப்பு செயற்றிட்டம் திருகோணமலையில் அதிசிறப்பாக நடைபெற்றது.

கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண அனுசரணையுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

திருகோணமலையில் ஊக்குவிப்பு செயற்றிட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ஸ்போர்ட்ஸ்ஃபெஸ்ட் குழாத்தினர் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊக்குவிப்பு செயற்றிட்டம் கலை நிகழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட்டது.

இதேவேளை, பேஸ்போல், ரக்பி, கால்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுப் பயிற்சிகள் பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

பட்டிப்பளை மத்திய மகா வித்தியாலயத்தின் ஈட்டி எறிதல் வீராங்கனை நாகேந்திரம் உதயவாணி திருகோணமலை மாவட்டத்தின் திறமைவாய்ந்தவராகத் தெரிவானார்.

ஸ்போர்ட்ஸ்ஃபெஸ்ட் – Allianz விருது வழங்கல் விழாவில் நம்பிக்கையின் சுடரை ஏந்திய குழுவுக்கு பாடசாலை மாணவ, மாணவிகளும் பிரதேசவாசிகளும் உற்சாக வரவேற்பளித்தனர்.

சுடரை ஏந்திய வாகனத் தொடரணி கந்தளாய், ஹபரண ஆகிய பகுதிகளைக் கடந்து பொலன்னறுவையை சென்றடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்