அரசியலமைப்பை மாற்றுவதற்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அஸ்கிரிய மகாநாயக்கர் மீண்டும் வலியுறுத்தல்

அரசியலமைப்பை மாற்றுவதற்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அஸ்கிரிய மகாநாயக்கர் மீண்டும் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2019 | 8:02 pm

Colombo (News 1st) அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை விட நாட்டு மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் இன்று மீண்டும் வலியுறுத்தினார்.

தாம் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவர்கள் இலங்கைக்குள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றே கோரியதாகவும் நாட்டைப் பிடிக்கும் எண்ணம் தமக்கில்லை என குறிப்பிட்டதாகவும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன ​தேரர் குறிப்பிட்டார்.

பூகோள இலங்கை மன்றத்தினர் இன்று மகாநாயக்க தேரரை சந்தித்தபோது அவர் இந்த கருத்தினைக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்